சிங்கப்பூரில் 12 வயது மாணவர் உட்பட 3 புதிய COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் உறுதி..!

3 new COVID-19 cases in Singapore
3 new COVID-19 cases in Singapore, including 12-year-old student from Raffles Institution: MOH (Photo: Google Maps/Raffles Institution)

சிங்கப்பூரில் மூன்று புதிய கோவிட் -19 நோயாளிகள் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) உறுதிப்படுத்தப்பட்டதாக, சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்த புதிய நபர்களில் ராஃபிள்ஸ் இன்ஸ்டிடியூஷனைச் சேர்ந்த 12 வயது சிங்கப்பூர் மாணவர் ஒருவரும் அடங்குவார்.

இதையும் படிங்க : மதுரையின் ஜில் ஜில் ஜிகர்தண்டா இனி சிங்கப்பூரிலும்…!

இதன் மூலம் இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையை 96ஆக உள்ளது.

மேலும் நான்கு நோயாளிகள், அதாவது 18, 72, 78 மற்றும் 80 ஆகிய சம்பவங்களில் உறுதிசெய்யப்பட்ட நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் MOH தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், 66 நபர்கள் இந்த தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். மேலும், முப்பது COVID-19 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர், எட்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று CNA குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கட்டாய விதிமுறை மீறல்; தனது PR தகுதியை இழந்த ஆடவர்..!

புதிய சம்பவங்கள்

94 மற்றும் 95 சம்பவங்களில் உறுதிசெய்யப்பட்ட நபர்கள் சிங்கப்பூர் குடிமக்கள் ஆவார்கள். இவர்கள் சீனா அல்லது தென் கொரியாவின் Daegu மற்றும் Cheongdo ஆகிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.

சம்பவம் 94-ல் உறுதிசெய்யப்பட்ட நபர் 64 வயதான பெண். அவருக்கு புதன்கிழமை COVID-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பெண் ஜலான் ஜுராங் கெச்சில் பகுதியில் வசித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

சம்பவம் 95-ல் உறுதிசெய்யப்பட்ட நபர் 44 வயதான சிங்கப்பூர் ஆடவர், இவர் சம்பவம் 93 உடன் தொடர்புடையவர்.

சம்பவம் 96-ல் உறுதிசெய்யப்பட்ட நபர், ராஃபிள்ஸ் இன்ஸ்டிடியூஷனைச் சேர்ந்த 12 வயதுடைய சிங்கப்பூர் மாணவர்.

இவர் சம்பவம் 94-ன் குடும்ப உறுப்பினர் ஆவார். தற்போது கே.கே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.