சிங்கப்பூரில் கட்டாய விதிமுறை மீறல்; தனது PR தகுதியை இழந்த ஆடவர்..!

Man loses PR status
Man loses PR status, barred from re-entering Singapore after breaching Stay-Home Notice (Photo: Mothership)

கொரோனா வைரஸை எதிர்த்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில், சிங்கப்பூரில் 45 வயதான நபரை வீட்டில் தங்குமாறு விடுக்கப்பட்ட கட்டாய அறிவிப்பை மீறியதற்காக தனது நிரந்தரவாசி (PR) அந்தஸ்தை அவர் இழந்துள்ளார்.

மேலும் அவர் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்படும் என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) புதன்கிழமை (பிப்ரவரி 26) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19; மேலும் இரண்டு புதிய நபர்களை உறுதிசெய்த சிங்கப்பூர்..!

கடந்த இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று ஆபத்து நிறைந்த பகுதிகளுக்குச் சென்ற சிங்கப்பூரர்களுக்கும், இங்கு வசிப்பவர்களுக்கும் மற்றும் வேலை செய்பவர்களுக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் விதிமுறை பொருந்தும். இந்த அறிவிப்பின்படி 14 நாட்களில் எல்லா நேரங்களிலும் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.

இவர் சமீபத்தில் சீனாவுக்குச் சென்று சென்று வந்துள்ளார். இவருக்கு கடந்த 20ஆம் தேதி வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது, அதை தொடர்ந்து சிங்கப்பூர் திரும்பிய சில நாட்களில் ICA அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டபோது அவர் வீட்டில் இல்லை எனவும் தெரியவந்தது.

இதையும் படிங்க : சிகரெட் புகையினால் ஏற்பட்ட தகராறு; ரம்பத்தை கொண்டு முகத்தில் தாக்கியவருக்கு சிறை..!

அதன் பின்னர் கடந்த பிப்ரவரி 23 அன்று, அந்த நபர் சாங்கி விமான நிலையத்தில் சிங்கப்பூரை விட்டு செல்ல முயன்றார்.

மேலும் கட்டாய வீட்டில் தங்கும் அறிவிப்பின் விதிகளை மீறியதாக ICA அதிகாரிகளால் அவர் எச்சரிக்கை செய்யப்பட்டார்.

ஆனால், அவர் சிங்கப்பூரை விட்டு செல்ல வேண்டும் என்று ICA அதிகாரிகளிடம் வலியுறுத்தி கூறியதாக ICA தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் அவரது நிரந்தரவாசி தகுதி நிராகரிக்கப்பட்டு, மேலும் மீண்டும் சிங்கப்பூர் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.