சிகரெட் புகையினால் ஏற்பட்ட தகராறு; ரம்பத்தை கொண்டு முகத்தில் தாக்கியவருக்கு சிறை..!

Hawker jailed for slashing man's face with saw
Hawker jailed for slashing man's face with saw at coffee shop after dispute over cigarette smoke

சிகரெட் புகை தொடர்பாக காபி ஷாப்பில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் மற்றொருவரின் முகத்தில் ரம்பத்தால் தாக்கியுள்ளார்.

இதில் குற்றம் சாட்டப்பட்ட 52 வயதான லியாவ் ஹியான் லிங், 14 மாதங்கள் சிறையில் (பிப்ரவரி 25) அடைக்கப்பட்டுள்ளார் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு S$2,400 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு (COVID-19) கொரோனா வைரஸ்; ஐந்து பேர் குணமடைந்துள்ளனர்..!

கடந்த ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி 88 லோராங் 25A கெய்லாங்கில் (88 Lorong 25A Geylang) உள்ள காபி ஷாப்பில் 36 வயதான சென் சுன்ஹோ என்ற நண்பருடன் லியாவ் மது அருந்திக்கொண்டிருந்ததாக நீதிமன்றம் விசாரணைகள் தெரிவிக்கின்றன.

அவர்கள் அந்த கடையின் புகைபிடிக்கும் பகுதியில் அமர்ந்திருந்தனர், தங்களுடைய மேசைக்கு அடுத்தபடியாக பாதிக்கப்பட்ட 53 வயதான நபர் தனது நண்பர்கள் குழுவுடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.

பாதிக்கப்பட்டவரின் மேசையிலிருந்து சிகரெட் புகை அவர்களின் பக்கம் வீசியதால் லியாவின் நண்பர் கோபமடைந்ததாக துணை அரசு வக்கீல் ஸ்டீபனி கோ தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு பாதிக்கப்பட்டவரின் மேசையில் இருந்தவர்களிடம் புகைபிடிப்பதை நிறுத்துமாறு அவர் கூற, இரு குழுக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதற்கிடையே லியாவ் ரம்பம் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தார். பின்னர் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து கோபமடைந்த லியாவ் ரம்பத்தால் தாக்கியதாக CNA குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : குறிப்பிட்ட இரு பகுதிகளுக்கு சமீபத்தில் சென்றவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை..!

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கன்னத்தில் 15 செ.மீ நீளமான வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கான மருத்துவ செலவு சுமார் S$2,400 ஆனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்டனை

வெட்டும் கருவியால் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக, லியாவ்க்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம், பிரம்படி விதிக்கப்படலாம் அல்லது இந்த தண்டனைகள் கலைவையாகவும் கொடுக்கப்படலாம்.