சிங்கப்பூரில் போலியான பொருட்கள் விற்பனை; 3 பேர் கைது – $239,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..!

3 people arrested for selling fake goods
3 people arrested for selling fake goods at Nex and Jurong Point; items worth $239,000 seized (PHOTO: SINGAPORE POLICE FORCE)

நெக்ஸ் ஷாப்பிங் மால் மற்றும் ஜுராங் பாயிண்ட் ஷாப்பிங் சென்டரில் நடந்த சோதனைகளில், போலியான பொருட்களை விற்பனை செய்ததாக இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்த மூவரும் 32 முதல் 42 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பொது மருத்துவமனை வார்டுக்குள் COVID-19 தொற்று பரவுகிறதா? – சுகாதார அமைச்சகம் விசாரணை..!

இவர்கள் பல்வேறு ஆன்லைன் இணையதளங்களில் போலியான பொருட்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாரால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், $239,000-க்கும் அதிகமான மதிப்புள்ள வர்த்தக முத்திரையை மீறும் 3,392 பொருட்கள் அதாவது பைகள், pouches மற்றும் பணப்பைகள் ஆகியவை அடங்கும்.

போலியாக பயன்படுத்தப்பட்ட வர்த்தக முத்திரைகளுடன் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விநியோகித்தல் போன்ற குற்றங்களுக்காக, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், $100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Source : Straits Times

இதையும் படிங்க : COVID-19; சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்துச் சேவை கடுமையாகப் பாதிப்பு..!