சிங்கப்பூரில் சுமார் 36,400 வேலை தேடுபவர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது – மனிதவள அமைச்சகம்..!

30% MORE HELPED BY CAREER MATCHING SERVICES THIS YEAR
(PHOTO: MOM/Facebook)

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களை ஆதரிப்பதற்காக, தொழில் ஆலோசனை மற்றும் சேவைகளை மேம்படுத்தியுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மொத்தம் 36,400 வேலை தேடுபவர்கள், சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு மற்றும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகம் மூலம் அடிப்படை தொழில் ஆலோசனை அல்லது வேலை தேடல் உதவியைப் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியாக பொறுப்பேற்ற திரு. பெரியசாமி குமாரன் – அதிபரை சந்தித்தார்..!

அதிரடி நடவடிக்கை காலகட்டத்தில் பல தடைகள் இருந்தபோதிலும், உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று MOM கூறியுள்ளது.

அடிப்படை தொழில் ஆலோசனை அல்லது வேலை தேடல் உதவி பெற்றவர்களில், 22,700 பேர் தனிப்பட்ட தொழில் பயிற்சி பெற்றனர். இது 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதிரடி நடவடிக்கையின் போது வேலை தேடுபவர்களில் பலர் தொலைபேசி அல்லது காணொளி மூலம் பயிற்சி பெற்றதாகவும் MOM கூறியுள்ளது. ஜூலை மாத இறுதியில், இதுபோன்ற மெய்நிகர் பயிற்சி அதிகமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில் ஆலோசனை மற்றும் சேவைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, வேலை தேடுபவர்கள் MyCareersFuture வலைத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது 6883 5885 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து அடுத்த மாதம் முதல் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg