சிங்கப்பூரில் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – காலியிடங்கள் 30% குறைவு..!

(Photo Credit: TODAY)

இந்த ஆண்டு, முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளுக்கு இடையில் நிறுவனங்களிடையே காலியிடங்கள் 30 சதவீதம் குறைந்துவிட்டதாக Michael Page’s சிங்கப்பூர் நிர்வாக இயக்குனர் நிலே கண்டேல்வால் (Nilay Khandelwal) தெரிவித்துள்ளார்.

COVID-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வர்த்தகங்களால், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், ஒரு சிறிய பதவிகளுக்கு பலர் போட்டியிடுகின்றனர் என்று ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிய தொழில்முனைவோருக்கான மானிய ஆதரவு S$50,000ஆக உயர்வு..!

வேலை தேடுவோர், ஒரு வேலையைப் பெறுவதற்கு சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை அதிக காலம் எடுப்பதாகவும், முதலாளிகள் பணியமர்த்தல் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட நபர்கள் வேலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வேலை தேடுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில், வேலை ஒன்றுக்கு 15 முதல் 20 சதவீதம் கூடுதல் விண்ணப்பங்கள் வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை தேடுவோர் எண்ணிக்கை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விடத் தற்போது 25 சதவீதம் அதிகரித்திருப்பதாக Michael Page நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வேலை தேடுவோர் பட்டியலில், புதிய பட்டதாரிகள் மட்டுமல்லாது அனுபவம் மிக்க நிபுணர்களும் அடங்குவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பணியிடை மாற்றம் செய்த ஊழியர்கள் புதிய வேலைகளை பெற்றுள்ளனர் – MOM..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg