சிங்கப்பூரில் பணியிடை மாற்றம் செய்த ஊழியர்கள் புதிய வேலைகளை பெற்றுள்ளனர் – MOM..!

PropertyGuru lays off 79 employees
(PHOTO: Today)

சுமார் 330 வேலை தேடுபவர்கள், கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் SGUnited வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் தொகுப்பின் கீழ் வேலைகளை பெற்றுள்ளனர் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

இதில் பாதி பேர் professional conversion programmes (PCPs) எனப்படும் நிபுணத்துவ மாற்றத் திட்டங்களில் பங்கேற்ற பணியிடை மாற்றம் செய்த ஊழியர்கள் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அனைத்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் COVID-19 கிருமித்தொற்று இல்லை..!

மேலும் 150 புதிய மற்றும் சமீபத்திய பட்டதாரிகள் ஜூன் முதல் SGUnited Traineships திட்டத்தின் கீழ் புதிய நிறுவனங்களில் நுழைந்துள்ளனர்.

புதிய நிறுவனங்கள் வழங்கும் சம்பளமானது, மற்ற துறை சார்ந்த நிறுவனங்களுக்குடன் ஒப்பிடுகையில் குறைவில்லை என்று அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது.

அவர்களுக்கு வழங்கும் சம்பளம், தொழில் விதிமுறைக்கு கீழ் வர அவசியமில்லை என்று MOM அறிக்கை கூறியுள்ளது.

புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களில், மென்பொருள் திறனாளர்கள், பொறியாளர்கள், சமையல் வல்லுநர்கள் போன்ற உயரிய 5 பதவிகளுக்கான இடைநிலை வருமானம் 2,700 – 6,000 வெள்ளிக்கும் இடைப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேலை உருவாக்க ஊக்குவிப்புத் திட்டத்தில் பயன்பெற நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கையை கட்டிக்காக்கவேண்டும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg