வேலை உருவாக்க ஊக்குவிப்புத் திட்டத்தில் பயன்பெற நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கையை கட்டிக்காக்கவேண்டும்..!

வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டத்தில் பயன்பெறுவதற்கு நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டிக்காக்கவேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்துள்ளார்.

இந்த ஊக்குவிப்புத் திட்டம் குறித்து துணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியெட் கடந்த திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் உட்பட சில நாடுகளுடன் விமானப் பயணத்தை மீண்டும் தொடங்க இந்தியா திட்டம்..!

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்.

மேலும் அதற்காக 1 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

புதிதாக வேலையில் சேர்க்கப்படும் உள்ளூர் ஊழியர்களுக்கு அந்த திட்டம் சம்பள மானியங்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் மீண்டும் கிருமித்தொற்று பாதிப்பு – 7,000 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg