அனைத்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் COVID-19 கிருமித்தொற்று இல்லை..!

new work permit CMP Employers provide proof of stay
Photo: Today

சிங்கப்பூரில் அனைத்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

மேலும், ஊழியர்களை தனிமைப்படுத்தும் தற்காலிகத் தங்கும் விடுதிகளிலும் தொற்று இல்லை என்று (MOM) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வேலை உருவாக்க ஊக்குவிப்புத் திட்டத்தில் பயன்பெற நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கையை கட்டிக்காக்கவேண்டும்..!

இங்கிருந்த குடியிருப்பாளர்களின் தனிமை காலம் முடிந்துள்ளது அல்லது அவர்கள் பல்வேறு அரசாங்க தங்கும் இட வசதிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளர்.

இதில் நோய் வரும் முன் காத்தல், கண்டறிதல், கட்டுப்படுத்துதல், தனிமைப் படுத்துதல் ஆகிய யுக்திகள் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தொற்று மீண்டும் பரவாமல் இருக்க மேற்கொள்ளப்படவுள்ளன.

இதையும் படிங்க: லிட்டில் இந்தியாவில் ஒருவரை காரில் கட்டாயப்படுத்தி இழுத்த சந்தேக நபர்கள் 4 பேர் கைது..!

முன்னர், கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் சுமார் 100 புதிய COVID-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்று மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்தது.

இந்நிலையில், இந்த புதிய பாதிப்புகள் காரணமாக சுமார் 7,000 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg