சிங்கப்பூரில் புதிய தொழில்முனைவோருக்கான மானிய ஆதரவு S$50,000ஆக உயர்வு..!

Higher grants, more mentorship support for first-time start-up founders under enhanced programme
(Photo: Reuters)

சிங்கப்பூரில் மேலும் புதுமையான நிறுவனங்களை தொடங்க ஊக்குவிக்கும் ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, முதல் முறையாக புதிய நிறுவனங்களைத் தொடங்கும் தொடக்க தொழில்முனைவோருக்கான மானிய ஆதரவு S$50,000 ஆக உயர்த்தப்படும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (ESG) தெரிவித்துள்ளது.

Startup SG Founder திட்டத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு மூன்று மாத புத்தாக்க திட்டமும் இருக்கும் என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (ESG) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பணியிடை மாற்றம் செய்த ஊழியர்கள் புதிய வேலைகளை பெற்றுள்ளனர் – MOM..!

இந்த Startup SG Founder திட்டத்திற்கு, சுமார் S$150 மில்லியன் வரை நிதி ஒதுக்கப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கடந்த திங்கட்கிழமை தெரிவித்தார்.

ஒவ்வொரு நெருக்கடியான காலக்கட்டத்திலும், ஒரு புதிய தலைமுறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் எப்போதும் இருக்கும், அதே போல் இந்த நெருக்கடி காலக்கட்டத்திலும் இருப்பதாக, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் சான் சூன் சிங் தெரிவித்துள்ளார்.

COVID-19 தொற்றுநோயால், உள்நாட்டு புதிய நிறுவனங்கள் சந்தைகளில் வளரவும், ஊடுருவவும் உதவும் வகையில் அரசாங்கம் அதன் சில முயற்சிகளை துரிதப்படுத்தியுள்ளது.

அதேபோல, புதிய நிறுவனங்கள் சிங்கப்பூரைத் தாண்டி வாய்ப்புகளைத் தேடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தபோது அமைச்சர் இவற்றை தெரிவித்தார்.

சிங்கப்பூரில் புத்தாக்கத்தையும், புதிய தொழில்முனைப்பையும் ஊக்குவிப்பது முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களிடையே மீண்டும் தொற்று – சமாளிக்க கட்டுமான நிறுவனங்கள் தயார்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg