சிங்கப்பூரில் மேலும் 3,190 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா தடுப்பு பணிகள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையானது ஏற்றம், இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.

“சிங்கப்பூரில் இருந்து சென்னை, திருச்சிக்கு கூடுதல் விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (13/10/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (13/10/2021) பிற்பகல் 12.00 மணி நிலவரப்படி, மேலும் 3,190 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் அளவில் 3,184 பேருக்கு நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சமூக அளவில் 2,686 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 498 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த பயணிகளில் 6 பேருக்கும் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,35,395 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 192 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர் கடல்கரையில் காணப்படும் பச்சை பாம்பு போன்ற மீன் – காணொளி

கொரோனாவால் 1,507 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. இதில் 300 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 46 பேர் கவலைக்கிடமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.