“சிங்கப்பூரில் இருந்து சென்னை, திருச்சிக்கு கூடுதல் விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

Photo: Air India Express Official Twitter Page

சிங்கப்பூர்- இந்தியா இடையே இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர்- திருச்சி இடையே அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். இருப்பினும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவைத் தொடர்பான அட்டவணையை அறிவித்த ஒரு சில தினங்களிலேயே பயண டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துவிடுவதால், பெரும்பாலான தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று விமான நிறுவனத்திற்கு தமிழர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளில் பெரும் கூட்டமாக ஈடுபட்டதாக எட்டு பேர் பிடிபட்டனர்

அதனையேற்ற விமான நிறுவனம், சிங்கப்பூர்- திருச்சி இடையே கூடுதல் விமானங்களைத் தொடர்ந்து இயக்கி வருகிறது. அந்த வகையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிங்கப்பூர்- சென்னை, சிங்கப்பூர்- திருச்சி இடையே அக்டோபர் மாதம் கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி, சிங்கப்பூர்- சென்னை இடையே அக்டோபர் 16, 23, 30 ஆகிய நாட்களில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும். இந்திய நேரப்படி பிற்பகல் 01.25 PM சிங்கப்பூரில் இருந்து புறப்படும் விமானம், பிற்பகல் 02.55 PM மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடையும்.

ஆடவருடன் குளியலறை டிக்டாக் காணொளி – வீட்டுப் பணிப்பெண் மீது குற்றச்சாட்டு

அதேபோல், சிங்கப்பூர்- திருச்சி இடையே அக்டோபர் 18, 20, 22, 25, 27, 29 ஆகிய நாட்களில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும். இந்திய நேரப்படி, இரவு 07.00 PM மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்படும் விமானம், இரவு 08.35 PM மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும். இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பயணிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூர் கடல்கரையில் காணப்படும் பச்சை பாம்பு போன்ற மீன் – காணொளி

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம்- 4 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.