சிங்கப்பூர் கடல்கரையில் காணப்படும் பச்சை பாம்பு போன்ற மீன் – காணொளி

Chua Tien-Seng and Wikipedia (for illustrative purposes)

சிங்கப்பூரின் கடல் கரையை ஆராயும் ஒருவர் சமீபத்தில் வித்தியாசமான உயிரினம் ஒன்றை கண்டார்.

அதாவது கடலில் குறைந்த அலை அடிக்கும் மதிய இடைவெளியில் நடந்து சென்ற சுவா டீன்-செங் இதனை கண்டதாக மதர்ஷிப்பிடம் கூறினார்.

சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளில் பெரும் கூட்டமாக ஈடுபட்டதாக எட்டு பேர் பிடிபட்டனர்

இந்த நடைப்பயணத்தை Singapore Adventurous Nature-Lovers என்ற குழு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மிதமான அலைகள் பல்வேறு உயிரினங்களைக் கண்டறிய சிறந்த நேரம், ஏனெனில் கடல்நீர் பாறைக் கரையோரத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு பின்வாங்கும்.

நண்டுகள், சிறிய மீன்கள், கடல் நட்சத்திரங்கள் மற்றும் பவளப்பாறைகள் போன்ற கடல் உயிரினங்கள் இந்த பகுதியை தங்கள் வசிப்பிடம் ஆக்கியுள்ளன.

இந்நிலையில், பச்சை நிறத்தில் பாம்பு போன்ற ஒரு நீண்ட உயிரினத்தை பாறையின் அடியில் சுவா மற்றும் அந்த குழு கண்டது.

அது என்னவென்று தெரியாமல், ஆரம்பத்தில் அது ஒரு பாம்பு போலத் தோன்றும் நீளமான மீன் என்று நம்பினர்.

இறுதியாக இந்த மீன் “ஈல்-பிளென்னி” வகை என அடையாளம் காணப்பட்டது.

இது இந்தோ-மேற்கு பசிபிக்கின் கடலோரப் பகுதிகளில் காணப்படும் பாறைகள், கடற்பாசி படுக்கைகள், அலை அடுக்கு மற்றும் உவர் வாழ்விடங்களில் காணப்படும் ஓர் கடல்வாழ் உயிரி ஆகும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்குமாறு மனு: 6,000 பேர் கையெழுத்து