தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்குமாறு மனு: 6,000 பேர் கையெழுத்து

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்கள் தங்களை வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களுக்கு வணிக வளாகங்களுக்குள் அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 28 நாட்களில் தடுப்பூசி போடாத / முதல் டோஸ் மட்டும் போட்டுக்கொண்ட 73.4% பேர் உயிரிழப்பு

இதுதொடர்பாக கடந்த அக்.10 முதல் கோரிக்கை மனு எழுந்தது, அதில் இரண்டு நாட்களில் 6,000க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் பதிவு செய்யப்பட்டது.

எனினும், அக்டோபர் 12ஆம் தேதி இந்த மனு Change.org தளத்தில் இருந்து காணாமல் போனது. எந்த ஒரு தகவலும் இல்லாமல் அது அகற்றப்பட்டுள்ளது.

மனு, Change.org தளத்தின் சேவை விதிமுறைகளை மீறியதால் அகற்றப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

​​புள்ளிவிவரங்கள்படி (அக்டோபர் 10, 2021 வரை), சிங்கப்பூரில் 100 பேரில் 85 பேர் முதல் டோஸைப் பெற்றுள்ளன, மேலும் 83 பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அந்த மனுவின் நகலை மட்டும் இங்கே பார்க்கலாம்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துவிடலாம், ஆனால் மனத் தேவையை எளிதில் அளந்துவிட முடியாது