சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளில் பெரும் கூட்டமாக ஈடுபட்டதாக எட்டு பேர் பிடிபட்டனர்

Shin Min Daily News/FB

பெடோக்கில் சட்டவிரோத குதிரை பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் எட்டு பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை கடைபிடிக்கவில்லை என்றும் அவர்கள் மீது சந்தேகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்குமாறு மனு: 6,000 பேர் கையெழுத்து

விசாரணையில் உள்ள அவர்கள் 52 மற்றும் 90 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெடோக் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கடந்த அக்டோபர் 6 முதல் 10 வரை, பிளாக்ஸ் 24 மற்றும் 26 நியூ அப்பர் சாங்கி சாலையின் அருகே அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில், பந்தயப்பணம் வாங்குபவர்களாக ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 70 மற்றும் 73 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் பந்தயம் கட்டியதாக 52 முதல் 90 வயதுக்குட்பட்ட மற்ற ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

மேலும், இதில் S$3,500க்கும் அதிகமான பணம் மற்றும் பந்தய சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் கடந்த 28 நாட்களில் தடுப்பூசி போடாத / முதல் டோஸ் மட்டும் போட்டுக்கொண்ட 73.4% பேர் உயிரிழப்பு