ஆடவருடன் குளியலறை டிக்டாக் காணொளி – வீட்டுப் பணிப்பெண் மீது குற்றச்சாட்டு

(PHOTO: Facebook)

சிங்கப்பூரில், ஆடவர் ஒருவர் குளிக்கும் டிக்டாக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து 33 வயது வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இன்று அக்டோபர் 13 செய்தி அறிக்கையின்படி, இந்தாண்டு ஜனவரி 3, அன்று வீட்டுப் பணிப்பெண் பற்றி போலீசாருக்கு புகார் கிடைத்தது.

சிங்கப்பூர் கடல்கரையில் காணப்படும் பச்சை பாம்பு போன்ற மீன் – காணொளி

குளியலறையில் வயதான ஆடவருக்கு குளிக்க உதவி செய்யும் அந்த பணிப்பெண் அதனை காணொளியாக எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த காணொளிகளில் ஒன்றை சமூக ஊடகங்களில் அவர் பதிவேற்றினார்.

பணிப்பெண் அந்த காணொளிகளை மற்றவர்களுக்கு அனுப்பியதாக நம்பப்படுகிறது.

அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாளை அக்டோபர் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது அத்தகைய தண்டனைகளின் கலவை ஏதேனும் விதிக்கப்படலாம்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பெண் என்பதால் தண்டனை பெற்றால் பிரம்படி விதிக்க முடியாது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்குமாறு மனு: 6,000 பேர் கையெழுத்து