“பணத் தேவைக்காக விக்கிறோம்”- போலி கைப்பேசிகளை S$600க்கு விற்பனை செய்த 4 ஆடவர்கள் கைது

போலி கைப்பேசிகளை S$600க்கு விற்பனை
SPF

போலி கைப்பேசிகளை S$600க்கு விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த தகவலை நேற்று முன்தினம் (மார்ச் 21) போலீசார் வெளியிட்ட செய்தியில் அறிய முடிந்தது.

இயந்திரத்தின் இடையில் சிக்கி 23 வயதான வெளிநாட்டு ஊழியர் மரணம்

இதில் 27 முதல் 49 வயதுக்குட்பட்ட 4 ஆடவர்கள் மீது மோசடி செய்ததாக நேற்று மார்ச் 22 அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

போலி கைப்பேசிகளை விற்றதாக, கடந்த மார்ச் 9ம் தேதி முதல் 17ம் தேதி வரை பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மூன்று புகார்களை போலீசார் பெற்றதாக கூறியுள்ளனர்.

தங்களுக்கு பணப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களை அணுகிய அவர்கள், பல்வேறு பிராண்டட் கைப்பேசிகளை சலுகை விலையில் விற்க முயற்சி செய்துள்ளனர்.

அவர்கள் ஒரு கைப்பேசியை S$600 என்ற விலையில் விற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

கைப்பேசிகளை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் கொண்டு சென்ற பிறகு, அவை போலியானவை என்பதை வாங்கியவர்கள் கண்டறிந்தனர்.

அதன் பின்னர் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட மத்திய போலீஸ் பிரிவு அதிகாரிகள், அந்த நான்கு பேரின் அடையாளத்தை கண்டறிந்து அவர்களை மார்ச் 20 மற்றும் மார்ச் 21 ஆகிய தேதிகளில் தனித்தனியாக கைது செய்தனர்.

மேலும், போலியாக தயாரிக்கப்பட்ட பல கைப்பேசிகளும், உபகரணங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.

மேலதிக விசாரணைகளுக்காக கைதான ஆடவர்களின் கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுபோன்ற மோசடி குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் கடலில் விழுந்த இந்திய ஊழியரின் சடலம் கண்டெடுப்பு – சக ஊழியர் வெளியிட்ட வேண்டுகோள்

சிங்கப்பூரில் கடலில் விழுந்த இந்திய ஊழியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திரு. ராமதாஸ் என்ற அந்த ஊழியர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை பகுதியை சேர்த்தவர். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் கப்பல்துறை நிறுவனத்தில் மெக்கானிக்காவும் ஃபிட்டராகவும் பணிபுரிந்து வந்தார்.

முழு விவரம்சிங்கப்பூரில் கடலில் விழுந்த இந்திய ஊழியரின் சடலம் கண்டெடுப்பு – சக ஊழியர் வெளியிட்ட வேண்டுகோள்