இயந்திரத்தின் இடையில் சிக்கி 23 வயதான வெளிநாட்டு ஊழியர் மரணம்

வெளிநாட்டு ஊழியர்

சிங்கப்பூர் தொழிற்சாலை ஒன்றில் இயந்திரத்தின் பாகங்களுக்கு இடையில் சிக்கி 23 வயதான வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மார்ச் 16 அன்று பிடோக்கில் உள்ள உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நடந்தது.

சிங்கப்பூரில் கடலில் விழுந்த இந்திய ஊழியரின் சடலம் கண்டெடுப்பு – சக ஊழியர் வெளியிட்ட வேண்டுகோள்

இயந்திரத்தில் சிக்கிய சீன நாட்டை சேர்ந்த அவரை இயந்திரத்தை நிறுத்தி சக ஊழியர் ஒருவர் விடுவித்தார் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் மனிதவள அமைச்சகம் (MOM) பதிலளித்தது.

3017 Bedok North Street 5 இல் அன்று காலை 8.25 மணிக்கு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

அந்த முகவரியில், JTC கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான Gourmet East Kitchen என்ற தொழிற்சாலை அமைந்துள்ளது.

அன்று ​​பிற்பகல் 3.35 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் கடலில் விழுந்த இந்திய ஊழியரின் சடலம் கண்டெடுப்பு – சக ஊழியர் வெளியிட்ட வேண்டுகோள்

மீட்கப்பட்ட ஊழியர் சுயநினைவுடன் இருந்ததாகவும், பின்னர் அவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், ஆனால் அவர் காயங்கள் காரணமாக இறந்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் மற்றும் காவல்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன.

மேலும் பாதிக்கப்பட்ட நிறுவனத்தில் அனைத்து வேலைகளையும் நிறுத்துமாறு முதலாளிக்கு MOM அறிவுறுத்தியுள்ளது.

“இலகுவாக புரியும் வகையில் அனைத்து இயந்திரங்களும் எச்சரிக்கை அறிகுறிகளுடன் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் பயிற்சி பெற்ற ஊழியர்களை கொண்டு அவ்வாறான இயந்திரங்களை இயக்க வேண்டும்” என்று MOM குறிப்பிட்டது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் சதிச்செயல் ஏதும் நடந்ததாக சந்தேகிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இரண்டு வாரங்களுக்குள் இது குறைந்தது இரண்டாவது வேலையிட மரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 9 அன்று, மாண்டாய் லேக் சாலைக்கு அருகில் உள்ள கட்டுமான தளத்தில் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஊழியர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிங்கப்பூர் போலீஸ் கூறியது.

முழு விவரம்

கட்டுமான தளத்தில் வாகனம் மோதி வெளிநாட்டு ஊழியர் மரணம் – தரையில் குந்தியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்

வெளிநாட்டு ஊழியரை சீரழித்த ஆடவர் – தூங்கிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்