சிங்கப்பூரில் கடலில் விழுந்த இந்திய ஊழியரின் சடலம் கண்டெடுப்பு – சக ஊழியர் வெளியிட்ட வேண்டுகோள்

சிங்கப்பூரில் கடலில் விழுந்த இந்திய ஊழியரின் சடலம்
நாட்டுச்சாலை ப.ச.இராமதாஸ்/Facebook

சிங்கப்பூரில் கடலில் விழுந்த இந்திய ஊழியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திரு. ராமதாஸ் என்ற அந்த ஊழியர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை பகுதியை சேர்த்தவர். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் கப்பல்துறை நிறுவனத்தில் மெக்கானிக்காவும் ஃபிட்டராகவும் பணிபுரிந்து வந்தார்.

வெளிநாட்டு ஊழியரை சீரழித்த ஆடவர் – தூங்கிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்

கடந்த வாரம் (மார்ச்.9 ஆம் தேதி) அவர் தன்னுடைய வாழ்க்கையை மிக மோசமான முறையில் முடித்துக் கொண்டதாக அவரின் சக ஊழியர் அரவிந்த் பிரகாஷ் என்பவர் Facebook இல் பதிவிட்டார்.

அவர் கூறியதாவது; “இரவில் யாரும் பார்க்காத நேரத்தில் திரு. ராமதாஸ் லாரி பேட்டரியைக் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். ஏறக்குறைய 3 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் உப்பிய நிலையில் மிதந்ததை அடுத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டது” என அரவிந்த் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச்.12 ஆம் தேதி அன்று மெரினா சவுத் வார்ப் நீரில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது இயற்க்கைக்கு மாறான மரணம் என்றும் போலீசார் வகைப்படுத்தினர்.

அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் திருமணம் செய்துகொண்டார் என Facebook படங்கள் மூலம் காண முடிகிறது.

நாட்டுச்சாலை ப.ச.இராமதாஸ்/Facebook

திரு. ராமதாஸ் கடலில் மிக கடினமாக உழைத்தவர் என்றும், ஒரு நாள் கூட அவர் நிலப்பகுதிக்கு செல்லும் வாய்ப்பை அவரின் நிறுவனம் வழங்கவில்லை என அரவிந்த் அவரின் பதிவில் கூறியுள்ளார்.

“கடல்சார் நிறுவனங்களில் முற்றிலும் இலாபம் ஈட்டும் நோக்கத்துடன் இருக்கும் முதலாளிகள் ஊழியரின் வாழ்க்கையை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். மிக மோசமான வாழ்க்கை நிலை மற்றும் உணவுகளை உட்கொண்டு ஊழியர்கள் உங்கள் செல்வங்களை பெருக்கிக்கொள்ள உதவுகின்றனர்” என்றார் அரவிந்த்.

ஆனால், “வெளிநாட்டு ஊழியர்களின் மன ஆரோக்கியத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை” என்றும் அரவிந்த் குறிப்பிட்டார்.

“ராமதாஸின் கதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், ஊழியர்களை அடிமைகளைப் போல நடத்தும் நிறுவனங்களுக்கும் சென்றடையும் என்று நம்புகிறேன். கடல் பரப்பில் பணிபுரியும் எந்த வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும்” எனவும் அரவிந்த் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், ராமதாஸின் சொந்த ஊருக்கு சடலத்தை அனுப்ப சக ஊழியர்கள் பலரும் அவருக்காக வேண்டி நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வங்கி கணக்கு உடையவரா நீங்கள்.. இந்த பதிவு உங்களுத்தான்

வெளிநாட்டு ஊழியரை சீரழித்த ஆடவர் – தூங்கிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்