“மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வேலையை இழந்தனர்” – புதிதாக 4,000 பேர் வேலைகளில் சேர்ப்பு!

travel-to-malaysia-cny-2024
Pic: File/TODAY

சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்த 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் புதிதாக சுமார் 4,000 பேர் வேலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 7) தெரிவித்தார்.

அதே போல, விமானப் போக்குவரத்துத் துறையின் மனிதவளம் என்பது இன்னும் கோவிட்-க்கு முந்தைய நிலையை விட மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள் 2 பேரை அடித்து பணம், செல்போன் பறித்த 4 பேர் கைது

நன்யாங் 57வது தேசிய தின விழாவில் பேசிய திரு ஈஸ்வரன்; “COVID-19 தொற்றுநோய்க்கு முன்னர் விமானத் துறையில் சுமார் 35,000 பேர் பணிபுரிந்தனர், ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் அந்த எண்ணிக்கை 25,000 ஆகக் குறைந்தது” என்பதை சுட்டிக்காட்டினார்.

அதாவது “சுமார் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வேலையை இழந்தனர்” என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

விமானப் போக்குவரத்து பயணிகள் அளவைப் பொறுத்தவரை, ஜூலை மாதத்தில் COVID-க்கு முந்தைய நிலைகளில் சுமார் 56 சதவீதத்தை அது எட்டியதாக கூறப்பட்டுள்ளது.

பாலியல் சேவைக்கு பணம்… சிக்கிய யூடியூபர் – சிறையில் அடைத்த சிங்கப்பூர்