சிங்கப்பூரில் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 41 பேர் பட்டியலிலிருந்து நீக்கம்..!

41 cases removed from total count after they were found to be negative
41 cases removed from total count after they were found to be negative (Photo: Istock)

சிங்கப்பூரில் நேற்றைய அறிவிப்பில், 41 COVID-19 தொற்று பாதித்த நபர்கள், மொத்த எண்ணிக்கையிலிருந்து நீக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அடுத்த கட்ட சோதனைகளில் அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்பப்படுத்தப்பட்டதை அடுத்து, இதனை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட 3 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள்..!

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 49 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், சமூக அளவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிங்கப்பூரரும் ஒருவர் ஆவார்.

மேலும், இந்த புதிய நபர்களில் 3 பேர் இந்தியா, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். அதில் 2 பேர் வேலை அனுமதி சீட்டு
வைத்திருப்பவர்கள். இருவரும் சிங்கப்பூர் வந்த உடனே தனிமைப்படுத்தப்பட்டனர்.

மற்ற 2 பேர் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள். அவர்களுக்குக் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்று இன்னும் தெரியவில்லை என்றும் அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 43 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் என்றும் MOH தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 தொற்று இல்லை என அறிவிப்பு செய்யப்பட்ட, 3 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மீண்டும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதாவது Toh Guan Dormitory, Changi Lodge II மற்றும் North Coast Lodge ஆகிய 3 இடங்களில் புதிய பாதிப்புகளை சுகாதார அமைச்சகம் (MOH) அடையாளம் கண்டுள்ளது.

இதையும் படிங்க : அரசாங்கம் “எப்போதும் சிங்கப்பூரர்களின் பக்கம் இருக்கும்” – பிரதமர் லீ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
 Facebook
 Twitter
 Telegram

Sharechat

Instagram