கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட 3 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள்..!

(Photo: Facebook/Lawrence Wong)

சிங்கப்பூரில் COVID-19 தொற்று இல்லை என அறிவிப்பு செய்யப்பட்ட, 3 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மீண்டும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதாவது Toh Guan Dormitory, Changi Lodge II மற்றும் North Coast Lodge ஆகிய 3 இடங்களில் புதிய பாதிப்புகளை சுகாதார அமைச்சகம் (MOH) அடையாளம் கண்டுள்ளது.

இதையும் படிங்க : அரசாங்கம் “எப்போதும் சிங்கப்பூரர்களின் பக்கம் இருக்கும்” – பிரதமர் லீ..!

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, புதிதாக 49 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, அவர்களில் 43 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் என்றும் MOH தெரிவித்துள்ளது.

Toh Guan தங்கும் விடுதி

Toh Guan தங்கும் விடுதியில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு பாதிப்புகள், முந்தைய ஐந்து பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையது.

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அந்த தங்கும் விடுதியில் COVID-19 நோய்த்தொற்று அபாயம் இல்லை என்று MOH அறிவித்தது. முன்னர், அதில் 1,300க்கும் மேற்பட்ட COVID-19 கிருமித்தொற்று பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டன.

Toh Guan தங்கும் விடுதி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

Changi Lodge II தங்கும் விடுதி

முந்தைய ஆறு கிருமித்தொற்று பாதிப்புகள் Changi Lodge II தங்கும் விடுதியில் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அது ஒரு புதிய கிருமித்தொற்று குழுமமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக MOH புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அந்த தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு செய்யப்பட்டது, இறுதியில் ஜூலை மாதம் 18ஆம் தேதி நோய்த்தொற்று அபாயமிக்க இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்படுவதற்கு முன் முன்பு, அங்கு 500க்கும் மேற்பட்ட பாதிப்புகள் இருந்தன.

North Coast Lodge தங்கும் விடுதி

North Coast Lodge தங்கும் விடுதி நேற்று புதன்கிழமை ஒரு புதிய நோய்த்தொற்று குழுமமாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது முந்தைய ஏழு பாதிப்புகள் அந்த தங்கும் விடுதியுடன் தொடர்புடையது.

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அந்த தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டது, பின்னர் COVID-19 தொற்று இல்லை என ஆகஸ்ட் 14 அன்று MOH ஆல் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : இரு வெளிநாட்டு பணிப்பெண்கள் உயிரிழந்த லக்கி பிளாசா கார் விபத்து – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
 Facebook
 Twitter
 Telegram

Sharechat

Instagram