44 பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் அணிக்கு துணை பிரதமர் ஹெங் சுவீ கியட் பாராட்டு!

44 பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் அணிக்கு துணை பிரதமர் ஹெங் சுவீ கியட் பாராட்டு!
Photo: Deputy Prime Minister Of Singapore

 

12வது ஆசியான் பாரா போட்டிகள் (12th ASEAN Para Games) ஜூன் 03 கம்போடியா நாட்டின் தலைநகர் ப்னோம் பென் (Phnom Penh) நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில், புரூணை, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், ஈஸ்ட் திமோர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், லாவோஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சாங்கி விமான நிலையத்தில் புதிதாக மெக்டொனால்ட்ஸ் உணவகம் திறப்பு!

முதன்முறையாக, ஆசியான் பாரா போட்டிகளை கம்போடியா தலைமையேற்று நடத்திய நிலையில் ஜூன் 09- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில், இந்தோனேசியா அணி 159 தங்கம், 148 வெள்ளி, 94 வெண்கலம் என மொத்தம் 401 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Photo: Deputy Prime Minister Of Singapore

அதைத் தொடர்ந்து, தாய்லாந்து அணி 328 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், 201 பதக்கங்களுடன் வியட்நாம் அணி மூன்றாவது இடத்திலும், 123 பதக்கங்களுடன் மலேசியா அணி நான்காவது இடத்திலும், 116 பதக்கங்களுடன் பிலிப்பைன்ஸ் அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். சிங்கப்பூர் அணி 12 தங்கம், 15 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 44 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

மே தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ‘MWC’….. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உற்சாகம்!

சிங்கப்பூர் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள சிங்கப்பூரின் துணை பிரதமர் ஹெங் சுவீ கியட் (DPM Heng Swee Keat) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “நமது விளையாட்டு வீரர்கள் மொத்தம் 44 பதக்கங்களை நாட்டிற்கு கொண்டு வந்தனர். மிக முக்கியமாக, உங்கள் தைரியம், நெகிழ்ச்சி மற்றும் சிறந்த விளையாட்டுத்திறன் ஆகியவை பாராட்டுக்குரியது மற்றும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. பதக்கங்களை பெற உறுதுணையாக இருந்த சிங்கப்பூர் அணி வீரர்களின் பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.