சிங்கப்பூரில் மேலும் 474 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

TODAY

சிங்கப்பூரில் நேற்று (15/12/2021) மதியம் 12.00 மணி நிலவரப்படி, மேலும் 474 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 452 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 442 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 10 பேருக்கும் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 22 பேருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,74,617 ஆக அதிகரித்துள்ளது.

16 நாட்கள் உள்நாட்டு விடுமுறையில் செல்லும் சிங்கப்பூர் பிரதமர் லீ

கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 807 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக 517 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 68 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 32 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 4 பேரின் உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை: 18 பேருந்து சேவைகளின் அட்டவணையில் மாற்றம்!

நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த 636 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.