வித்தியாசமான முறையில் Singapore 4D டிராவில் பந்தயம் கட்டும் வாடிக்கையாளர்கள் – Singapore Pools வெளியிட்ட அறிவிப்பு

4D draw Singapore pools
Mothership & Google Maps

சிங்கப்பூரில் TOTO மற்றும் 4D லாட்டரியில் கலந்துகொள்பவர்கள் ஏராளம், அதேபோல அவர்கள் சில வித்தியாசமான அணுகுமுறைகளை யோசித்து கையாள்வதும் உண்டு.

அந்த வரிசையில், நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா மற்றும் நிக்கோல் சியாவுக்கும் இடையே தகாத உறவு குறித்த காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிங்கப்பூரர்கள், நிரந்தர வாசிகளுக்கு (PR) சிறப்பு சலுகை – மற்றவர்களுக்கு S$2 கட்டணம்

இதனை அடுத்து, இருவரும் பதவி விலகுவதாக அறிவித்தது குறித்து அனைவரும் அறிந்திருப்போம்.

அது ஒருபுறம் இருக்க, இதை வைத்து சிலர் சிங்கப்பூர் 4D குலுக்களில் பந்தயம் கட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது அவர்களின் வயதை வைத்து சிலர் பந்தயம் கட்டியுள்ளனர். இதன் காரணமாக 5447, 4754, 5336 மற்றும் 3653 ஆகிய நான்கு 4D எண்களை சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) ஏற்றுக்கொள்ள முடியாது என சொல்லிவிட்டதாம்.

4D குழுக்கள் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகளின் வயதுகள்:

  • டான் சுவாங்-ஜின் – வயது 54
  • செங் லி ஹு – வயது 47
  • லியோன் பெரேரா வயது – 53
  • நிக்கோல் சியா வயது – 36

நேற்று புதன்கிழமை மாலை 4 மணி முதல் மேற்கண்ட எண்களின் தொகுப்புகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது புதிதல்ல இதற்கு முன்னர் சிங்கப்பூரின் கவனத்தை பெற்ற சில சம்பவங்களின் அடிப்படையில் பந்தய எண்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“ஒரே ஒரு APP தான் Download செய்தேன்.. மொத்த பணமும் Close” – சிங்கப்பூரில் இருப்பவர்கள் உஷார்