ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் குழு நவம்பர் மாத இறுதியில் இருந்து வெளியே சாப்பிட அனுமதி

foreigner fined warning spore
Pic: Nuria Ling/TODAY

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் குழுக்களாக வெளியே சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நவம்பர் மாத இறுதிக்குள் உணவங்காடி நிலையம் மற்றும் காபி கடைகளுக்கு இந்த புதிய நடவடிக்கை நடைமுறைக்கு வரும்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்கள் இனி விரும்பும் இடத்திற்குச் செல்ல அனுமதி

இன்று (நவம்பர் 15), சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது.

உணவங்காடி நிலையம் மற்றும் காபி கடைகளில் தடுப்பூசி-வேறுபாடு நடவடிக்கைகளை செயல்படுத்த அந்த ஆபரேட்டர்களுடன் இணைந்து செயல்படுவதாக MOH கூறியது.

மேலும், உணவருந்துபவர்கள் SafeEntry மூலம் தனது வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

நவம்பர் மாத இறுதிக்குள் குறிப்பிட்ட உணவங்காடி நிலையங்களின் அது சோதனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக MOH கூறியது.

இது தொடர்பாக தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு, உணவங்காடி நிலையச் சங்கங்கள் மற்றும் நகர சபைகளுடன் இணைந்து செயல்படுகிறது.

மீதமுள்ள உணவங்காடி நிலையங்களில் விரைவில் அதனை பின்பற்ற முடியும் என்றும் MOH கூறியது.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமை இல்லா பயணத்தை தொடங்கும் சிங்கப்பூர்