சிங்கப்பூரின் 50 பிரபல சுற்றுலா மையங்கள்; தமிழக சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு..!

50 popular tourist destinations in Singapore

சிங்கப்பூரின் 50 பிரபல சுற்றுலா மையங்கள் குறித்து, சென்னையில் கன்னிமாரா ஓட்டலில் ஸ்டால் அமைத்து சுற்றுலா பயணிகளுக்கும் சுற்றுலா ஏஜெண்ட்களுக்கும் அங்குள்ள வசதி, சலுகைகளை பற்றி சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் விவரித்தனர்.

சிங்கப்பூர், தமிழ்நாட்டிலிருந்து அதிக சுற்றுலா பயணிகளை வரவேற்க உள்ளது என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரிய தெற்காசிய மண்டல டைரக்டர் ஜி.பி. ஸ்ரீதர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பயணி தவறவிட்ட பணப் பர்ஸை ஒப்படைக்க 200 கி.மீ பயணம் செய்த ஓட்டுநர்..!

மெரினா பே சாண்ட்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் விரிவாக்கத் திட்டங்கள், செண்டோசாவை மறுவடிவமைத்தலுக்கான ஒரு மிகப் பெரிய செயல்திட்டத்தையும் விவரித்தனர்.

மாண்டாய் சூழல் சுற்றுலா மையம் போன்ற சிங்கப்பூரின் சுற்றுலாத் துறையில் சமீபத்திய மற்றும் விரைவில் மேற்கொள்ளப்பட இருக்கும் வளர்ச்சிகள் குறித்தும் இந்த நிகழ்ச்சியின்போது விரிவாக விளக்கிக் கூறப்பட்டது.

ஜி.பி.ஸ்ரீதர் இதுகுறித்து கூறுகையில், “சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் சிங்கப்பூர் சுற்றுலாச் சந்தையில் மூன்றாவது மிக முக்கிய நாடாக இந்தியா உள்ளது, மேலும் சுற்றுலா வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள், பல்வேறு சந்தைப்படுத்தல் முயற்சிகள் மூலம் பயணிகளை வேகமாக ஈர்த்து வருகிறோம் என்றார்.

இதையும் படிங்க : அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை மிஞ்சிய சிங்கப்பூரின் நவீன லேசர் காட்சி….!

மேலும், தென்னிந்திய நகரங்களான பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத், கொச்சி, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் மற்றும் விசாகப்பட்டினம் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன. இந்த 9 நகரங்களில் இருந்து சுமார் நான்கு மணி நேர விமான பயணத்தில் சிங்கப்பூரை அடையலாம், என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு www.stb.gov.sg மற்றும் www.visitsingapore.com என்ற இணைய தளங்களைக் காணலாம்.