சிங்கப்பூரில் எண்கள் மனனம் செய்வதில் சாதனை படைத்த தமிழ் சிறுமி!

Vennila Munusamy

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி ஆறு வயதான இஷானி சண்முகம், அதிக இலக்கங்களை மனனம் செய்து தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

கணித மாறிலியின் 1,560 தசம இடங்களை மனப்பாடம் செய்து அதனை பிழையின்றி கூறி சாதனை படைத்துள்ளார்.

“காலவரையற்ற முடக்க நிலையிலும் இருக்க முடியாது, கட்டுப்பாடுகள் இன்றி விட்டுவிடவும் முடியாது” – பிரதமர் லீ

2018ஆம் ஆண்டில் 1,505 இலக்கங்களுடன் முந்தைய சாதனையைப் படைத்த சான்சி சூரஜ் மற்றும் 2013ஆம் ஆண்டில் 1,380 இலக்கங்களுடன் சாதனை படைத்த வெலன் சோ ஆகியோரின் சாதனையை அவர் முறியடித்தார்.

இந்நிலையில், அவர் “சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்” தனக்கான முதல் இடத்தை தற்போது தக்கவைத்துள்ளார்.

கடந்த அக். 13 அன்று இஷானி, சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் பணியாளர்கள் முன்னிலையில், சுமார் 10 நிமிடங்களில் அந்த இலக்கங்களை நிதானமாகப் படித்து சாதனை படைத்தார்.

அவர் படித்து காட்டும்போது போது, அவரது தாயார் திருமதி வெண்ணிலா முனுசாமியின் இதயம் பலமாக துடித்ததாக நெகிழ்ச்சியுடன் அதனை கூறினார்.

அவரது தந்தை, திரு சண்முகம் வி.எஸ் (வயது 42) ஒரு முதலீட்டு வங்கியில் தொழில்நுட்ப மேலாளராக பணிபுரிகிறார்.

அவரும் அவரது மனைவியும் ஒவ்வொரு நாளும் சில புதிய இலக்கங்களை அறிமுகம் செய்ததாகவும், கடந்த ஏப்ரல் மாதம் தனது பயிற்சியைத் தொடங்கியதாகவும் திரு சண்முகம் கூறினார்.

கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஆடவர் கைது