சிங்கப்பூரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 65 மசூதிகளில் நடைபெறும் – முன்பதிவு கட்டாயம்..!

Singapore celebrate haji 2021
Photo credit: Erwin Soo/Flickr

ஹஜ்ஜி பெருநாளை முன்னிட்டு சுமார் 65 மசூதிகளுக்கு, முன்பதிவு அடுத்த வாரம்  தொடங்கும் என்று சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (MUIS) ஊடக வெளியீட்டில் அறிவித்துள்ளது.

மொத்தம் 8,750 பேர் வரை கலந்துகொள்ள முன்பதிவு செய்யலாம். இதில் 45 மசூதிகள் மூன்று தொழுகை அமர்வுகளையும், மேலும் 20 மசூதிகள் இரண்டு தொழுகை அமர்வுகளையும் வரும் ஜூலை 31 காலை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அடுத்த மாதம் முதல் கொரோனா இருக்காது.!

பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் காரணமாக தொழுகையில் பங்குகொள்வோர் முன்பதிவு செய்து கொள்வது கட்டாயம் ஆகும்.

இதில் முன்பதிவு அடுத்த திங்கட்கிழமை 28ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் தொடங்கும், MuslimSG செயலி மற்றும் https://ourmosques.commonspaces.sg/ என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்ய முடியும் என்று MUIS தெரிவித்துள்ளது.

இருப்பினும், இடங்கள் குறைவாக இருப்பதால், முன்பதிவு செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே பிரார்த்தனை நடத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, மூத்தவர்கள், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற நபர்கள் மசூதிக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய முஸ்லிம் சமூகத்தினருக்கு தமிழ் மொழி, மலையாளம், வெளிநாட்டு ஊழியர்களுக்காக வங்காள மொழி போன்ற மொழிகளில் இஸ்லாமிய சமய உரை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “சிங்கப்பூரில் இந்த ஆண்டு வித்தியாசமான ஒரு தேசிய தின கொண்டாட்டமாக இருக்கும்” – பிரதமர் லீ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg