COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 7 மெக்டொனால்டு ஊழியர்கள் 9 விற்பனை நிலையங்களில் பணிபுரிந்துள்ளனர்..!

7 McDonald's employees infected with Covid-19 had been deployed across nine outlets in Singapore
7 McDonald's employees infected with Covid-19 had been deployed across nine outlets in Singapore

COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட ஏழு மெக்டொனால்டு ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 18) நண்பகல் வரை, ஒன்பது வெவ்வேறு விற்பனை நிலையங்களில் பணியாற்றியதாக சுகாதார அமைச்சகம் (MOH) திங்களன்று தெரிவித்துள்ளது.

இந்த துரித உணவு நிறுவனம், சிங்கப்பூரில் 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது மற்றும் நாடு முழுவதும் 135-க்கும் மேற்பட்ட உணவகங்களை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க : மலேசிய ஓட்டுநர்களின் உணவிற்காக S$2400 செலவிட்டிருக்கும் சிங்கப்பூர் டிரைவர்!

சிங்கப்பூரில் மெக்டொனால்டு (McDonald’s) ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) முதல் “சர்க்யூட் பிரேக்கர்” என்னும் புதிய நடவடிக்கை காலம் முடியும் வரை, அனைத்து விற்பனை நிலையங்களிலும் தனது உணவக சேவைகளை நிறுத்தி வைப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

“ஏப்ரல் 18 அன்று, ஒன்பது வெவ்வேறு விற்பனை நிலையங்களில் பணிபுரிந்த ஏழு மெக்டொனால்டு ஊழியர்களுக்கு COVID-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது,” என்று MOH செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் COVID-19-க்கு எதிரான போராட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி மெக்டொனால்டு மே 3 வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையாக 1,426 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!