700 பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்வை ஏற்பதாக ‘Giant’ சூப்பர் மார்க்கெட் அறிவிப்பு!

singapore chain giant supermarket
Pic: Today

 

வரவிருக்கும் 2024- ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) என்றழைக்கப்படும் ‘ஜிஎஸ்டி’ வரி 8%- லிருந்து 9% ஆக உயரவிருக்கிறது. இந்த வரி அதிகரிப்பால், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், சூப்பர் மார்க்கெட்டுகள் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் புதிய வகை பர்கர்களை அறிமுகப்படுத்தும் மெக்டொனால்ட்ஸ்!

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் பிரபல சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்றான ‘Giant’ சூப்பர் மார்க்கெட் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “2024- ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதங்கள் வரையிலான 700 அத்தியாவசியப் பொருட்களுக்கான ஒரு சதவீத ஜிஎஸ்டி வரி உயர்வை எங்கள் நிறுவனம் ஏற்கும். உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களும் இதில் அடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 700 பொருட்களும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே பொருட்கள் தேர்வுச் செய்யப்பட்டதாக ‘Giant’ சூப்பர் மார்க்கெட் தெரிவித்துள்ளது.

2024 தொடக்கத்திலேயே கோடீஸ்வரனாகும் வாய்ப்பு.. சிங்கப்பூர் TOTO லாட்டரி அசத்தல் அறிவிப்பு

அதேபோல், வாரத்தில் செவ்வாய்க்கிழமைகளில் எங்கள் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து முதியோர் வாங்கும் பொருட்களுக்கு 4% தள்ளுபடி வழங்கப்படும் என்றும், இந்த சலுகை 2024- ஆம் ஆண்டு முழுவதும் அமலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.