சிங்கப்பூரில் அதிரடி சோதனை: 71 பேரை கைது செய்தது போலீஸ்

71-suspected-drug-offenders-arrested
CNB

சிங்கப்பூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் 71 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) கைது செய்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த செப். 19 முதல் செப். 23 வரை இந்த சோதனை நடந்ததாக CNB கூறியுள்ளது.

சிங்கப்பூரர்கள் விசா இல்லாமல் 90 நாட்கள் வரை இந்த நாட்டுக்கு ஜாலியா போகலாம்..!

சோதனையின் போது, ​​சுமார் 158 கிராம் ஹெராயின், 77 கிராம் “ஐஸ்” வகை போதைப்பொருள், 90 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட இந்த போதை பொருட்களில் வீதி மதிப்பு சுமார் S$26,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமலாக்க நடவடிக்கை பெடோக், கல்லாங் மற்றும் தெம்பனீஸ் ஆகிய இடங்களில் நடந்ததாக CNB செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.

பிடிபட்ட அனைத்து சந்தேக நபர்களிடமும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூரில் இறந்து கிடந்த செய்தித்தாள் போடும் ஊழியர் – போலீஸ் விசாரணை