மூதாட்டி மீது காரை மோதிய 71 வயது முதியவருக்கு அபராதம்!

(Photo: TODAY)

 

நடப்பாண்டு ஜனவரி 23- ஆம் தேதி அன்று இரவு 09.00 மணிக்கு சிங்கப்பூரில் உள்ள ராஃபிள்ஸ் டவுன் கிளப்பின் (Raffles Town Club at 1 Plymouth Avenue) உள்பாதையில் காரை மெதுவாக ஓட்டிக்கொண்டு வந்த பெக் டியோங் டாட் (Pek Teong Tat) (வயது 71) என்பவர், 85 வயதான பாதசாரி மீது மோதினார். அப்போது கார் மூதாட்டியின் காலில் இடித்ததால், அவர் கீழே விழுந்தார். சரியான நேரத்தில் பிரேக் போட்டு காரை நிறுத்தாததால், கார் மூதாட்டியின் கால்கள் மீது ஏறியது.

‘டிபிஎஸ் வங்கியில் பணி’- விண்ணப்பிக்க அழைப்பு!

அதைத் தொடர்ந்து, விபத்து தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் மூதாட்டிக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, மூதாட்டிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில், மூதாட்டி மீது கார் மோதிய முதியவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முதியவர் கார் ஒட்டிக்கொண்டிருந்த போது அவர் செல்போனை பயன்படுத்தியுள்ளார். அவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது என்று காவல்துறையினர் கூறுகின்றன.

சிங்கப்பூரில் புதிதாக 1,012 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இவ்வழக்கு இன்று (20/09/2021) விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான அரசு துணை வழக்கறிஞர் ஜோசப் க்வீ (Deputy Public Prosecutor Joseph Gwee), “விபத்தை ஏற்படுத்திய முதியவருக்கு குறைந்தது 2,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் மற்றும் ஓராண்டிற்கு வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரினார்.

இதனிடையே, முதியவர் மீது விபத்து தொடர்பான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட நிலையில், அவர் தனது கவனக்குறைவால் விபத்தை ஏற்படுத்தியதை நீதிபதி முன் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, முதியவருக்கு 2,000 சிங்கப்பூர் டாலர் அபராதமும், ஒன்பது மாதங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.