“75 வயது முதியவரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

 

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 75 வயது சீன முதியவரை மார்ச் 31- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, பிளாக் 15 யுனோஸ் கிரெசன்ட் (Blk 15 Eunos Crescent) பகுதியில் காணப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் புதிய விதி

அப்போது, நீல நிற சட்டை மற்றும் கிரே நிற ஷார்ட்ஸ், காலணிகளை அணிந்திருந்துள்ளார். இவரை யாரேனும் பார்த்தாலோ (அல்லது) முதியவரைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இண்டிகோ விமானத்தில் வாந்தி, மலம் கழித்த பயணி!

ட்விட்டர் பதிவுடன், காணாமல் போன முதியவரின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது காவல்துறை.