சிங்கப்பூரில் ஜீரோ சகிப்புத்தன்மை அணுகுமுறை; 3 நாட்களில் 8 பேர் பிடிபட்டனர்..!

LTA enforces e-scooter ban on footpaths : சிங்கப்பூரில் இந்த புத்தாண்டு முதல், விதிமுறைகளை அமல்படுத்துவதில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டின் முதல் மூன்று நாட்களில் மட்டும், நடைபாதையில் ஈ-ஸ்கூட்டர் தடை இருப்பதை புறக்கணித்து விட்டு செயல்பட்ட எட்டு குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

இதையும் படிங்க : 3 வினாடிகளில் பிறந்த 3 குழந்தைகள்: 2020 ஆம் ஆண்டின் முதல் குழந்தைகளை சிங்கப்பூர் இனிதே வரவேற்றது..!

தவறான முறையில் இயக்கிய இ-ஸ்கூட்டர் பயனர்கள் ஆங் மோ கியோ (Ang Mo Kio), காமன்வெல்த், செரங்கூன், தெலோக் பிளங்கா (Telok Blangah), வெஸ்ட் கோஸ்ட் மற்றும் உட்லேண்ட்ஸ் போன்ற பகுதிகளில் பிடிபட்டதாக தரைவழிப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நடைபாதைகளில் மின்ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு LTA கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடை விதித்திருந்தது. இருப்பினும், தவறான ஓட்டுனர்களுக்கு இரண்டு மாத காலம் “ஆலோசனைக் கூறும் காலத்தின்” ஒரு பகுதியாக முன் எச்சரிக்கை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

இதையும் படிங்க : கடந்த 2019ஆம் ஆண்டில் உலகின் மிகவும் பிரபலமான சிறந்த 10 நகரங்கள்..!