3 வினாடிகளில் பிறந்த 3 குழந்தைகள்: 2020 ஆம் ஆண்டின் முதல் குழந்தைகளை சிங்கப்பூர் இனிதே வரவேற்றது..!

This year's first New Year's Day baby, Christie Lim, was born at exactly midnight to Ms Amanda Lek and Mr Benjamin Lim. (PHOTO: LIANHE ZAOBAO)

Singapore welcomes first babies of 2020 : சிங்கப்பூரில் 2020 புதிய ஆண்டின் முதல் நாள் நள்ளிரவில் மூன்று தம்பதிகள் தங்கள் குழந்தைகளை இனிதே மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இந்த ஆண்டின் புத்தாண்டு தின முதல் குழந்தை, கிறிஸ்டி லிம் ஆகும். இந்த குழந்தை மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனையில் சரியாக நள்ளிரவில் திருமதி.அமண்டா லெக் (வயது 27) மற்றும் திரு.பெஞ்சமின் லிம் (வயது 30) ஆகிய இரு ஆசிரியர்களுக்கும் பிறந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் விதிமுறை கடுமையாக்கப்பட்ட முதல் நாளே பிடிபட்ட இருவர்..!

குழந்தையின் பெற்றோர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் இதுபற்றி கூறுகையில், “உண்மையில், குழந்தை புதிய ஆண்டின் முதல் குழந்தையாக இருக்கும் என்று நம்பவில்லை அல்லது எதிர்பார்க்கவில்லை” என்று கூறினர்.

Vidhyut Jeganathan was born just a second past midnight to Mr Babu Jeganathan and Madam Vishnu Priya. The couple have another two-year-old son. (PHOTO: LIANHE ZAOBAO)

இந்நிலையில், இந்த புது வருடத்தில் பிறந்த இரண்டாவது குழந்தை வித்யுத் ஜெகநாதன், நேஷனல் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் நள்ளிரவில் பிறந்தார். குழந்தையின் பெற்றோர்கள், வடிவமைப்பு பொறியாளரான திரு பாபு ஜெகநாதன் (வயது 29) மற்றும் இல்லத்தரசி விஷ்ணு பிரியா (வயது 25).

Nathan Hee was born two seconds past midnight to Mr Hee Thung Han and Ms Kok Li-en. The couple have an 18-month-old daughter. (|PHOTO: LIANHE ZAOBAO)

இதனை தொடர்ந்து, வித்யுத் பிறந்த ஒரு நொடிக்குப் பிறகு, நாதன் ஹீ என்ற குழந்தை அதே மருத்துவமனையில் பிறந்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் லக்கி பிளாசா கார் விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதித் திரட்டப்படுகிறது..!

குழந்தையின் பெற்றோர் திரு.ஹீ துங் ஹான் (வயது 33), இவர் ஒரு பொறியாளர் மற்றும் திருமதி.கோக் லி-என் (வயது 30), இவர் ஒரு ஆசிரியர்.