811, 860 பேருந்து சேவைகளின் பாதை மாற்றங்கள் குறித்து எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் அறிவிப்பு!

Photo: SBS Transit Ltd

எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் (SBS Transit Ltd) இன்று (27/12/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அடுத்தாண்டு (2022) ஜனவரி 23- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 811 என்ற எண் கொண்ட பேருந்து சேவை காதிப் (Khatib) நோக்கிச் செல்லும் திசையில் யீஷுன் போக்குவரத்து நடுவத்தில் (BS 59009) இனிமேல் நிற்காது. சொங் பாங்கில் (Chong Pang) இருந்து யீஷுன் (Yishun) போக்குவரத்து நடுவத்திற்கு, அல்லது யீஷுன் போக்குவரத்து நடுவத்தில் இருந்து காதிப் நோக்கிச் செல்லும் பயணிகள், யீஷுன் நிலையத்தின் வெளிவாயில் E- க்கு முன்னால் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கலாம்/ ஏறலாம் (BS 59072).

“74e, 151e பேருந்து சேவைகள் ஜன.17 முதல் நிறுத்தப்படும்”- எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் அறிவிப்பு!

அதேபோல், அடுத்தாண்டு (2022) ஜனவரி 23- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 860 என்ற எண் கொண்ட பேருந்து சேவை இயோ சூ காங் (Yio Chu Kang) பேருந்து நிலையத்தில் இருந்து யீஷுன் போக்குவரத்து நடுவம் (Yishun Integrated Transport Hub) வழியாகச் சுற்றி வரும் பயணப் பாதையில் எந்த மாற்றமும் இல்லை. பிறச்சேர்க்கை ‘T’ சேர்க்கப்பட்ட பயணங்கள், இயோ சூ காங் பேருந்து நிலையத்திற்குத் திரும்பிச் செல்லாமல் யீஷுன் போக்குவரத்து நடுவத்தில் முடிவடையும்.

10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியது சிங்கப்பூர்!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஎஸ் டிரான்ஸிட் வாடிக்கையாளர் சேவை எண் 1800- 287- 2727 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) www.sbstransit.com.sg என்ற இணையப் பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்.” இவ்வாறு எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.