10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியது சிங்கப்பூர்!

Photo: Changi Airport

போட்ஸ்வானா (Botswana), கானா(Ghana), மலாவி (Malawi), மொசாம்பிக் (Mozambique), நமீபியா (Namibia), நைஜீரியா (Nigeria), தென்னாபிரிக்கா (South Africa), ஜிம்பாப்வே (Zimbabwe), ஈஸ்வதினி (Eswatini), லெசோதோ (Lesotho) ஆகிய 10 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கோ (அல்லது) பயணிப்பதற்கோ விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry Of Health) நேற்று (26/12/2021) அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் விசா நிராகரிக்கப்பட்டால் கவலைப்பட வேண்டாம் – அதற்கும் இருக்கு வழி இருக்கு! எளிய தமிழில் தெளிவான விளக்கம்!

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிங்கப்பூரின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பட்டியலில் நான்காவது பிரிவின் (Category IV Border Measures) கீழ் வருவார்கள். சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டு, பரிசோதனை முடிவில் நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். மேலும், அதற்கான ‘நெகட்டிவ்’ சான்றிதழை பயணிகள் கையில் வைத்திருக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து, சாங்கி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்னர், 10 நாட்கள் கட்டாயம் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும். எங்கு தங்கப் போகிறோம் என்பதை முழு முகவரியை சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை (26/12/2021) இரவு 11.59 PM மணி முதல், கடந்த 14 நாட்களுக்குள் இந்த நாடுகளில் பயணம் மேற்கொண்டவர்களாக இருக்க வேண்டும்; அவர்கள் மட்டுமே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

சிங்கப்பூரில் சுமார் 52,000 ஊழியர்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை – MOM

10- வது நாள் முடிவில் மீண்டும் கொரோனா பிசிஆர் (PCR) பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் பரிசோதனை முடிவை சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு அளிக்க வேண்டும்” என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘ஒமிக்ரான்’ மாறுபாடு உலகம் முழுவதும் பரவலாக பரவியுள்ளது. சிங்கப்பூர் அதன் பயணக் கட்டுப்பாடுகளை அதற்கேற்ப புதுப்பித்து வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னதாக, ‘ஒமிக்ரான்’ வகை கொரோனா பரவல் காரணமாக, ஆப்பிரிக்க நாடுகளுக்கு சமீபத்திய பயண (Travel History) வரலாற்றைக் கொண்ட நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் (Long-Term Pass Holders) மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் (Short-Term Visitors) சிங்கப்பூருக்குள் நுழையவோ, பயணிக்கவோ அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“சிங்கப்பூரில் வரும் நாட்கள், வாரங்களில் Omicron புதிய அலை எதிர்பார்ப்பு” – லாரன்ஸ் வோங்

பயணத் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் பயணிகள் விமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.