தவறான முறையில் சம்பாதிப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயல்… சிக்கிய 97 பேர்

Singapore job scam money mules
File Photo : Singapore Police

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்கள் மற்றும் 95 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அவர்கள் KTV விடுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

மெரினா ஈஸ்ட் பார்க் அருகே வாக்கிங் வந்த முதலை.. உலகின் மிகப்பெரிய முதலை இனம் இது

20 வயது ஆண் ஒருவரும், 95 பெண்களும் KTV விடுதியில் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைக்கான இடத்தை ஏற்பாடு செய்ததாக கூறி அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு நபரின் பாலியல் சேவையில் சம்பாதித்து வந்த 31 வயதான மற்றொரு ஆடவரும் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

10வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்..