சிங்கப்பூர் COVID-19 நெருக்கடியிலிருந்து இன்னும் வலுவாகவும் சிறப்பாகவும் மீண்டுவரும் – பிரதமர் லீ..!

A stronger and better Singapore will emerge from COVID-19 crisis despite 'immense challenges': PM Lee
A stronger and better Singapore will emerge from COVID-19 crisis despite 'immense challenges': PM Lee (Photo: Ministry of Communications and Information)

அடுத்த சில ஆண்டுகள் கடினமானதாக இருந்தாலும், சிங்கப்பூர் COVID-19 நெருக்கடியிலிருந்து வலுவாகவும் சிறப்பாகவும் மீண்டுவரும் என்று பிரதமர் லீ சியென் லூங் (ஜூன் 7) தெரிவித்துள்ளார்.

அதாவது “ஒரு தலைமுறைக்கான நெருக்கடியைச் சமாளித்தல்” என்ற தலைப்பில் தனது தேசிய உரைகளில் ஆரம்பமாக பிரதமர் லீ உரையாற்றினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வந்த பட்டியலில் முஸ்தஃபா சென்டர் உள்ளிட்ட இடங்கள் சேர்ப்பு..!

சிங்கப்பூருக்கு பொருளாதார வலிமை, நம்பகத்தன்மையான சர்வதேச நற்பெயர் மற்றும் சவால்களை சமாளிக்கும் திட்டங்கள் உள்ளன என்று திரு லீ கூறினார்.

கூடுதலாக, பல சிங்கப்பூரர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த சில வருடங்கள் நம் அனைவருக்கும் இடையூறு விளைவிக்கும் காலமாகவும் மற்றும் கடினமான நேரமாகவும் இருக்கும். ஆனால் இதுபோன்ற சவால்கள் இருந்தபோதிலும், பயப்பட வேண்டாம், மனதை இழக்காதீர்கள்” என்று திரு லீ தனது உரையில் கூறினார்.

இன்னும் பிரகாசமான எதிர்காலத்தை பாதுகாக்க முடியும் என்று நம்புவதாகவும், இந்த நெருக்கடியிலிருந்து இன்னும் சிறந்த மற்றும் வலுவான சிங்கப்பூர் மீண்டுவரும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் நீண்ட காலத்திற்கு COVID-19 உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று திரு லீ கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் லாம் ..!

“நாம் அனைவரும் நாம் வாழும் முறை, வேலை மற்றும் விளையாட்டை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும், அப்போது தான் வைரஸின் பரவலைக் குறைத்து நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.”

ஆனால் COVID-19 என்பது ஒரு பொது சுகாதார பிரச்சினை மட்டுமல்ல, இது கடுமையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினையாகும், மேலும் முற்றிலும் முன்பு எப்போதும் இல்லாத சூழ்நிலை என்றும் திரு லீ கூறினார்.

மனித இனம் நீண்ட காலத்திற்குப் பிறகு சந்தித்திருக்கும் மிகவும் ஆபத்தான நெருக்கடி என்றும் குறிப்பிட்டார்.

ஊழியர்கள், குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களைப் பாதுகாக்கச் சுமார் S$100 பில்லியன் ஒதுக்கப்பட்டதை திரு.லீ சுட்டிக்காட்டினார்.

சில தொழில்துறைகள் நிரந்தரமாக மாற்றப்படும் என்றும், பல தொழில்துறைகள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆட்குறைப்பும் வேலையின்மையும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சில வேலைகள் ஒட்டுமொத்தமாக மறைந்துவிடும் என்பதையும் பிரதமர் லீ சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 383 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!