ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சிங்கப்பூர் கோயில்களில் சிறப்பு பூஜை!

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சிங்கப்பூர் கோயில்களில் சிறப்பு பூஜை!
Photo: Hindu Endowments Board

 

ஆடிப்பூரம் மற்றும் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, ஜூலை 21- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.

இரண்டு பெண்களிடையே கடும் சண்டை: பொறாமை தான் காரணமாம்

அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, உற்சவ சிலையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் உள்ள உற்சவ சிலைக்கு, ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அலங்காரமும் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

தேசிய தின அணிவகுப்பு ஒத்திகை- பேருந்து சேவைகள் தொடர்பான எஸ்எம்ஆர்டியின் முக்கிய அறிவிப்பு!

மேலும், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், அம்மனுக்கு ஸ்ரீ துர்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஆடி மாதத்தின் முதல் வெள்ளியையொட்டி, சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், தங்கள் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.