“த்ரில்” அனுபவங்களை தேடுபவர்களுக்கான கைவிடப்பட்ட கிராமம்: கான்கிரீட் கல் விழுந்து பெண் மரணம்? – விசாரணை

LIANHE ZAOBAO

அப்பர் புக்கிட் திமா சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அசைவில்லாமல் கிடந்தார் என்றும், பின்னர் உயிரிழந்தார் என்றும் நாம் பதிவிட்டு இருந்தோம்.

அவர் எப்படி காட்டுப்பகுதியில் இறந்தார் என்ற கேள்வி அனைவரிடம் இருந்தது, அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 19) 48 வயதுப் பெண் அசைவற்றுக் காணப்பட்ட அந்த காடுகள் நிறைந்த பகுதி, “த்ரில்” அனுபவங்களை தேடுபவர்களுக்கான ஒரு கைவிடப்பட்ட கிராமம் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

அங்குள்ள கான்கிரீட் கல் அந்த பெண் மீது விழுந்தது என்றும், பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்பதையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புரிந்துகொள்கிறது.

இடிபாடுகளுக்கு மத்தியில் மக்கள் நடைபயணம் மேற்கொள்வதை, சம்பவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நான்கு யூடியூப் வீடியோக்கள் காட்டுகின்றன, இது பேச்சுவழக்கில் மென்டோசா கிராமம் அல்லது மெண்டோசா கம்பங் என விவரிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவரது உடலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இறந்தவர் மெலிடா டோலா என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அடையாளம் கண்டுள்ளது.

அன்று மதியம் 12.42 மணியளவில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மயக்க நிலையில் இருந்த பெண் இங் டெங் போங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இதில் ஏதும் சதிச் செயல் நடந்ததாக சந்தேகம் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

நிலவழி VTL: “ஜனவரி 21 முதல் தினசரி பேருந்து பயணங்கள் பாதியாக குறைக்கப்படும்”