உணவுத் துறையில் 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 6,700 வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன – MOM..!

(PHOTO: AFP/Roslan RAHMAN)

சிங்கப்பூரில் கிருமித்தொற்றின் தாக்கம் இருந்தபோதிலும், உணவுத் துறையில் 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கடந்த ஏப்ரல் முதல் சுமார் 6,700 வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

அவற்றில் 2,070 (சுமார் 38 சதவீதம்) வேலைகள், நிபுணர்கள், மேலாளர், நிர்வாக மற்றும் தொழில்நுட்பர்கள் (PMET) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : இந்தியாவில் டிக் டாக்கின் இடத்தை பிடிக்கும் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் செயலி..!

மேலும், சமையல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வணிக மேம்பாட்டு மேலாளர்கள் போன்றோருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் இன்று (செப்டம்பர் 21) மனிதவள அமைச்சின் (MOM) வேலைவாய்ப்பு தொடர்பான அறிக்கையின் ஆறாவது பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

PMET வேலைகளுக்கு, உணவக சேவை மேலாளர்களுக்கான சம்பளம் S$2,450 முதல் S$3,300 வரை, உற்பத்தி மேலாளர்களுக்கு S$2,500 முதல் S$6,050 வரை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

PMET அல்லாத வேலைகளுக்கு, பணியாளர்களின் சம்பளம் S$1,500 முதல் S$2,000 வரை இருக்கும், அதே நேரத்தில் உணவு பதப்படுத்தும் மேற்பார்வையாளர்கள் மற்றும் பொது ஃபோர்மேன் சம்பளம் S$2,250 முதல் S$2,750 வரை இருக்கும்.

இதில் அதிக அனுபவம் இல்லாத வேலை தேடும் நபர்கள், உணவு உற்பத்தி, சேவை ஆகிய துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று மனிதவள அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது. தற்போது சிங்கப்பூரின் உணவுத் துறையில் 200,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இதையும் படிங்க : வெளிநாட்டில் இருந்து வந்த வேலை அனுமதி உடையோருக்கு தொற்று பாதிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…