வெளிநாட்டில் இருந்து வந்த வேலை அனுமதி உடையோருக்கு தொற்று பாதிப்பு..!

IMPORTED CASES FROM PHILIPPINES, IRAN, GERMANY
PHOTO: NYTimes

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, புதிதாக 18 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனுடன் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 57,576ஆக உயர்ந்துள்ளது.

இதில் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 4 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து வரும் நாட்களில் தமிழகம் செல்லும் விமானங்களின் அப்டேட்..!

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 2 பேர் பிலிபைன்ஸ் நாட்டில் இருந்து வந்த வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள். மேலும், ஒருவர் மாணவர் விசா மூலம் ஜெர்மனியில் இருந்தும், மற்றொருவர் சார்பு விசா மூலம் ஈரானில் இருந்தும் சிங்கப்பூர் வந்துள்ளனர் .

அவர்கள் 4 பேரும் சிங்கப்பூர் வந்த உடனே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் தனிமையில் வைக்கப்பட்டு இருந்தனர் என்று MOH தெரிவித்துள்ளது.

மேலும், சமூக அளவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் பங்களாதேஷ் ஊழியர். அவர் கட்டுமானம், கடல்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடும் ஊழியர் ஆவார்.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : லிட்டில் இந்தியாவில் ஹனிஃபா கடை உள்ளிட்ட இடங்களுக்கு தொற்று நோயாளிகள் சென்றுவந்துள்ளனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…