இருவேறு விபத்துகள்.. குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஒருவர் கைது

accidents arrested drunk driving

சிங்கப்பூரில் கார்கள் கவிழ்ந்து இரண்டு விபத்துகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், மற்றொருவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒர்க் பெர்மிட்டில் கட்டுமான ஊழியராக வந்த தமிழர்… தற்போது “சிங்கப்பூர் குடிமகன்” – திருப்பு முனையாக அமைந்த ஒரு சம்பவம்

முதல் சம்பவம்

சனிக்கிழமை நள்ளிரவு 12.04 மணியளவில் சிசில் ஸ்ட்ரீட் மற்றும் க்ராஸ் ஸ்ட்ரீட் சந்திப்பில் கார் மற்றும் டாக்சி சம்பந்தப்பட்ட முதல் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் 54 வயதான கார் பயணி ஒருவர் சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

இரண்டாவது சம்பவம்

அதிகாலை 3.18 மணியளவில், உட்லண்ட்ஸ் சாலையை நோக்கி செல்லும் வழியில் அப்பர் புக்கிட் திமா சாலையில் கார் சறுக்கியதாக சொல்லப்படும் இரண்டாவது விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.

27 வயதான கார் ஓட்டுனர் சிறு காயங்களுக்கு ஆளானதாகவும், அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடர்கிறது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

பாலியியல் தொழில்… 200க்கும் மேற்பட்டோரை மடக்கி பிடித்த போலீஸ்