வேலையிடத்தில் ஏற்படும் விபத்துகளே, அதிக மரணங்களுக்கு முக்கிய காரணம்!

Photo: The New Pap

வாகன விபத்துகளே, வேலையிடத்தில் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணம் என்று மனிதவள அமைச்சு வேலையிடப் பாதுகாப்பு வெளியிட்ட அரையாண்டு புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

சுமார் 23 ஊழியர்கள், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பணிபுரிந்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். அதில் 6 சம்பவங்கள் வாகன விபத்துகளே என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

இந்த விபத்துகளில் உயிரிழந்த 4 விநியோக ஊழியர்களில் 3 பேர் மற்ற ஓட்டுநர்களின் கவனக் குறைவால் உயிரிழந்துள்ளனர் என்பது வருந்தத்தக்கது.

வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றம், தேசிய விநியோக தன்னுரிமை தாெழிலாளர்கள் சங்கம், கிராப், சிங்போஸ்ட் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற விபத்துக்களால் ஏற்படும் மரணங்களைக் குறைக்கும் நோக்கில் சிறப்பு பணிக்குழு ஒன்று உருவாக்கியுள்ளது.

இரு சக்கர ஓட்டுநர் கண்காணிப்பு மற்றும் வாகன விபத்து எச்சரிக்கை முறை போன்று வளர்ந்து வரும் தாெழில்நுட்ப தீர்வுகள் முன்னோடித் திட்டமாக விநியோக நிறுவனங்களிடையே ஆரம்பிக்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

இந்த மாதத்திலிருந்து 2 மாதத்திற்கு வாகன பாதுகாப்பு பற்றி அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு போக்குவரத்துச் சேவைத்துறை, கட்டுமானத்துறை, சரக்கு சேமிப்புத்துறை மற்றும் உற்பத்தித்துறை போன்ற போக்குவரத்து விபத்து அதிகம் கொண்ட துறைகளைக் ஆய்வு செய்யும்.

2021ம் ஆண்டின் முதற்பகுதியில் ஏற்பட்ட வேலையிட மரணங்களில் 60% கட்டுமானத்துறை மற்றும் போக்குவரத்துச் சேவைத்துறையை சேர்ந்தவையே.

துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த 3 பேரையும் சேர்த்து உற்பத்தித்துறையில் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் இதுவரை சுமார் 30 பேர் வேலையிடத்தில் விபத்தினால் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்பு ஏற்படாத விபத்துகளில் அதிகமானவை உற்பத்தித் துறையிலேயே அதிகமாக நிகழ்ந்துள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதற்பகுதியில் மட்டும் கிட்டதட்ட 6,411 பேர் வேலையிடத்தில் ஏற்பட்ட சம்பவங்களில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2021ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் பணியிடங்களில் பணியாற்றிய 82 பேருக்கு கோவிட்-19 தொற்று!