கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Photo: Today

சிங்கப்பூர் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல், கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வீவக மறுவிற்பனைப் பரிவர்த்தனைகள் குறைந்தது!

கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டிருந்தாலும் கூட, பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்; குறிப்பாக, முதியவர்கள் வெளியே வர வேண்டாம்; அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் கட்டாயம் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசிப் போடும் பணிகள் தொய்வின்றித் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 82%- க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர். சிங்கப்பூரர்களுக்கு மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- 100 பேர் பத்திரமாக வெளியேற்றம்!

இருப்பினும், சிலர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாமல், பொது இடங்களில் சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டவர்களின் கணிசமானோர், உணவங்காடி நிலையங்கள், சில்லறை வர்த்தகள் கடைகள், கடைத்தொகுதிகள் போன்ற இடங்களுக்கு அடிக்கடி சென்று வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாதவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் இனி உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடியாது; அங்கிருந்து உணவை வாங்கிச் செல்லலாம். அதேபோல், சுற்றுலாத் தளங்கள், கடைத்தொகுதிகளுக்கு செல்ல முடியாது. நோய்த்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.

உலகின் மிக ஆடம்பரமான நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு 8- வது இடம்!- ஆய்வில் தகவல்!

புதிய விதிமுறையின்படி, உணவங்காடிகள் அல்லது காப்பிக் கடைகளில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட, இருவர் மட்டுமே குழுவாக அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில், தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாதவர்களைப் பாதுகாக்கவும், சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பின் சுமையைக் குறைக்கவும், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் அக்டோபர் 13- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.” இவ்வாறு சுகாதாரத்துறையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.