2021ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் பணியிடங்களில் பணியாற்றிய 82 பேருக்கு கோவிட்-19 தொற்று!

Photo: Getty

2021ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் பணியிடங்களில் கோவிட்-19 கிருமித்தாெற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. இது சிங்கப்பூரின் பணியிடப் பாதுகாப்பு சாதனைக்கு ஓர் இடையூறாக அமைந்துள்ளது.

2017ம் ஆண்டிலிருந்து 2019 ஆண்டு வரை பணியிடங்களில் ஒருசில கோவிட்-19 கிருமித் தாெற்றுகளே இருந்தது.

“புதிய நிலையை அடைய மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம்”- பிரதமர் லீ உரை!

கடந்த ஆண்டு முதல் பாதியில் இந்த எண்ணிக்கை சிறிது அதிகமானது. கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த எண்ணிக்கை 28 உயர்ந்தது.

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பணியிடங்களில் அதிகமானோருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 கிருமித் தொற்றே கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டில் ஏற்பட்ட அனைத்து கிருமித் தொற்றுச் சம்பவங்களுக்கும் காரணம் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இரைச்சல் மற்றும் தசை எலும்பு பாதிப்புகள் போன்ற பணியிடத் தொடர்பான பாதிப்புகளை மருத்துவ முறையில் மதிப்பிடுவதும் கோவிட்-19 கிருமித் தாெற்று காரணமாக தாமதம் அடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இக்காரணத்தினால் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பணியிடப் பாதிப்புச் சம்பவங்கள் அதிகமாகியுள்ளன.

இந்த ஆண்டின் முதல் பாதியில் சுமார் 401 பணியிடப் பாதிப்புகள் சம்பந்தமான உடல் இயலாமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

2017ம் ஆண்டின் முதல் பாதிக்கு பின், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புச் சம்பவங்களே அதிக எண்ணிக்கையாகும். மேலும் இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டின் இரண்டாம் பாதியல் 326 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பணியிட பாதிப்பு சம்பவங்களின் விகிதம் 100,000 ஊழியர்களுக்கு 9.9 ஆக இருந்தது.

தற்போது 2021ம் ஆண்டின் முதல் பாதியில் பணியிட பாதிப்பு சம்பவங்களின் விகிதம் 100,000 ஊழியர்களுக்கு 12.1 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

மேலும் தசையெலும்பு பாதிப்பு மற்றும் இரைச்சலால் ஏற்படக்கூடிய காது கோளாறு போன்ற குறைபாடுமே பணியிடப் பாதிப்புகளில் அதிகம்தான் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு!