“சிங்கப்பூரர்கள் கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும்”- பிரதமர் லீ அறிவுறுத்தல்!

Photo: Prime Minister In Singapore

சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. இச்சூழலில் சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்திக் கண்காணித்து வருகிறது. மேலும், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- 100 பேர் பத்திரமாக வெளியேற்றம்!

இந்த நிலையில், கொரோனா நிலவரம் குறித்து நேற்று (09/10/2021) நண்பகல் 12.00 மணிக்கு பிரதமர் லீ சியன் லூங் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது, “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சவால் மிகுந்த சூழலை சிங்கப்பூர் எதிர்க்கொண்டு வருகிறது. சிங்கப்பூரர்கள் கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும். கொரோனா பற்றிய அச்சத்தால் முடங்கிவிடக்கூடாது. உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி முடிந்தவரை, அன்றாடப் பணிகளைச் செய்ய வேண்டும்.

நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறைத் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போதைய கொரோனா நோய்த்தொற்று பரவல் ஒரு கட்டத்தில் மெதுவடைந்துவிடும். புதிய இயல்பு நிலையை அடைய மூன்று முதல் ஆறு மாதத்திற்குள் ஆகக்கூடும்.

கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

முதியவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்ட முதியவர்கள் ‘பூஸ்டர்’ தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்” என்று பிரதமர் அறிவுறுத்தினார்.