அதர்வா நடித்துள்ள ‘பட்டத்து அரசன்’ திரைப்படம் சிங்கப்பூரில் வெளியானது!

File Photo

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் நடிகர் அதர்வா நடித்துள்ள படம் ‘பட்டத்து அரசன்’. இந்த படத்தை இயக்குநர் சற்குணம் இயக்கியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படம், கிராமத்து கதையை அடிப்படையாகக் கொண்டது.

ஒன்று இருந்தால் மற்றொன்று இல்லை! – சிங்கப்பூர் மருத்துவமனைகலில் படுக்கை மற்றும் செவிலியர் பற்றாக்குறை!

ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார், ஆர்கே சுரேஷ், ராஜ் அய்யப்பா, பால சரவணன் சத்ரு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று (25/11/2022) உலகம் முழுவதும் வெளியானது.

குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, துபாய், லண்டன் உள்ளிட்ட நாடுகளிலும் ‘பட்டத்து அரசன்’ திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்னும் பயங்கரமா இருக்கும்! – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர் நாணய ஆணையம்

‘பட்டத்து அரசன்’ திரைப்படம் சிங்கப்பூரில் ‘carnival Cinema Golden Mile Tower’ என்ற திரையரங்கில் மட்டும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.